Floating Facebook Widget

உங்கள் Wi-Fi மோடத்தில் இணைந்திருப்பவர்கள் யார் என்று கண்டுபிடிக்க

முதலில் நாம் இணையத்திற்கு வயர்கள் மூலமாக இணையத்தில் உலாவந்தோம். ஆனால் இப்பொழுது அனைவரும் வயர் ப்ரீ அல்லது வயர்லெஸ் மூலமாக வேகமாக இணையத்தில் உலா வருகிறோம்.


ஆனால் அதிலும் சில சிக்கல்கள் உள்ளது. நம் வீட்டில் வயர்லெஸ் மோடம் வைத்து நாம் அடுத்த ரூமில்இருந்து கொண்டு லேப்டாப்பில் இணையத்தில் உலாவருவோம்.

அதே நேரத்தில் நம் வீட்டுக்கு வெளியே காரில் இருந்து கொண்டு அல்லது பக்கது வீட்டில் இருந்து கொண்டு யாராவது நம் வயர்லெஸ் மோடம் வழியாக நம் காசில் இணையத்தில் உலாவந்தால் என்ன ஆகும்.

நம் காசும் போச்சு நம் தனி மனித இணைய பாதுகாப்பும் போச்சு என்று கொள்ள வேண்டியது தான். இது போல நடந்தால் கண்டுபிடிக்க நம் கணனி தவிர வேற எந்த கணனிகள் நம் வயர்லெஸ் மோடம் வழியாக இயங்குகிறது என்று தெரிந்து கொள்ள Who is on my Wifi என்ற மென்பொருள் உதவுகிறது.

Download As PDF

0 comments:

back to top