Floating Facebook Widget

ICICI வங்கியின் இலவச Online bank account

இந்தியாவின்  பிரபல வங்கியான ஐசிஐசிஐ தற்பொழுது புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு சேவையை துவங்கி உள்ளது. இதற்கு B2 Digital Banking என்று பெயர் வைத்துள்ளனர். இந்த ஆன்லைன் வங்கி கணக்கின் மூலம் ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்வது மட்டுமின்றி மின்சாரம், தொலைபேசி போன்றவைகளுக்காண பில் தொகையும் செலுத்த முடியும். மற்றும் இந்த சேமிப்பு கணக்கில் நீங்கள் வைத்திருக்கும் தொகைக்கு வருடத்திற்கு 3.5% என்ற வட்டி விகிதத்தில் கூடுதல் பணமும் கிடைக்கும்.



இந்த B2 ஆன்லைன் கணக்கை துவங்க நீங்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை மற்றும் zero balance-ல் கணக்கை தொடர முடியும்.  மற்றும் எந்த விதமான மறைமுக கட்டணமும் இல்லை. இந்த வங்கி கணக்கு தற்பொழுது சென்னை உட்பட சில இந்திய நகரங்களில் இருப்பவர்கள் மட்டுமே பெற முடியும்.

வழிமுறைகள்:

  • B2 ஆன்லைன் சேமிப்பு வங்கி கணக்கு வேண்டுவோர் இந்த லிங்கில் சென்று Apply here என்ற படிவத்தை பூர்த்தி செய்து வங்கிக்கு அனுப்பவும். 
  • பிறகு படிவத்தில் கொடுத்த ID Proof, Address Proof மற்றும் ஒரு கலர் போட்டோ வை வைத்திருக்கவும்.  
  • மூன்று நாட்களுக்குள் வங்கி நபர் உங்களை தொடர்பு கொண்டு இவைகளை பெற்று கொள்வார்கள்.
  • பின்பு உங்கள் கணக்கு தயாரானவுடன் ஈமெயில் மற்றும் SMS மூலமாக உங்களுக்கு தகவல் அனுப்புவார்கள். 
  • மற்றும் உங்கள் கணக்கின் Secret card உங்கள் முகவரிக்கு அஞ்சலில் அனுப்புவார்கள். அதன் மூலம் நீங்கள் B2 ஆன்லைன் கணக்கை ஆக்டிவேட் செய்து கொண்டு உபயோகித்து கொள்ளலாம். 
  • மேலும் ஏதேனும் தகவல் வேண்டுவோர் இங்கு சென்று பார்த்து கொள்ளவும்.


Download As PDF

0 comments:

back to top